Latest News :

இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை - ‘மியூசிக் ஸ்கூல்’ படம் பற்றி நடிகை ஸ்ரேயா நெகிழ்ச்சி
Friday May-05 2023

யாமினி பிலிம்ஸ் சார்பில் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மியூசிக் ஸ்கூல்’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி  ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து  நடித்துள்ளனர். 

 

இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. வரும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

இந்த நிலையில், ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரேயா, இயக்குநரும் தயாரிப்பாளருமான பப்பாராவ் பிய்யாலா, நடிகை லீலா சாம்சன், பி.வி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் கதிர்வன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து நடிகை ஸ்ரேயா பேசுகையில், “சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார். இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்.  ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Music School

 

இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா பேசுகையில், “இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன்.  குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது. ஸ்ரேயா சரண் மியூசிக் டீச்சர், ஷர்மன் ஜோஷி டான்ஸ் மாஸ்டராக போடலாம் என முடிவெடுத்த பிறகு நான் நியூயார்க் சென்று மியூசிக் பற்றி ஆராய்ச்சி செய்தேன். இந்தப்படத்தில் மியூசிக் எனும் போது இளையராஜா ஞாபகம் மட்டுமே வந்தது. என் நண்பர் அவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் போவதற்கு முன் இசை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது. ஆனால் அவர் ‘வா’ நாம் செய்யலாம் என்றார். அதன்பிறகு எல்லாமே மேஜிக் தான். அவர் இசை இப்படத்தில் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும். ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் என எல்லோருமே மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள். மிக அட்டகாசமான நடிப்பைத் தந்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். இந்தப்படம் உங்கள் மனதைப் பாதிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை லீலா சாம்சன் பேசுகையில், “முக்கால்வாசி படங்களில் என்னைச் சாவது மாதிரி காட்டுகிறார்கள். இந்த படத்தில் அது இல்லை என்பது சந்தோசம். பிரகாஷ் ராஜ் சார் இதில் எனக்கு மகனாக நடித்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் என் ஹஸ்பண்ட், இதில் மகன். இந்தியத் திரையுலகில் ஆண்கள் எப்போதும் இளமையாக இருக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு வயதாகிவிடுகிறது. இந்தக்கதை மிக முக்கியமான ஒரு பிரச்சனையைச் சொல்கின்ற கதை. என் உறவினர்களிலேயே,  இந்த பிரச்சனை இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் இளையராஜா அவர்களின் மியூசிக்கை எல்லோரும் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

பி வி ஆர் பிக்சர்ஸ் சார்பில் கதிரவன் பேசுகையில், “நாங்கள் பி வி ஆர் பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறோம். மிகச்சிறப்பான படம், உங்கள் ஆதரவைத் தாருங்கள்  நன்றி.” என்றார். 

Related News

8977

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery