நான்கு கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் திரில்லர் படம் ‘காட்டேஜ்’!
Wednesday May-17 2023

ஏவொலுஷன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் படம் ‘காட்டேஜ்’. விஜய் டிவி புகழ் கே.பி.ஒய் நவீன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் ஆரியா செல்வராஜ், கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.  

 

ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அதை செய்தது யார்? என்பதை இருக்கை நுணியில் உட்கார்ந்து பார்க்கும் விதத்தில் பரபரப்பாக சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் ‘காட்டேஜ்’.

 

சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்துள்ளார். கு.கார்த்திக் பாடல்கள் எழுத, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். தினேஷ் மோகன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

முழுக்க முழுக்க ஊட்டி பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 25 நாட்களில் படக்குழு நடத்தி முடித்துள்ளது. தற்போது பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு சமீபத்தில் வெளியிட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலான நிலையில், விரைவில் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாக உள்ளது.

Related News

8990

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery