’கிரிமினல்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய கெளதம் கார்த்திக்!
Wednesday May-17 2023

அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் ‘கிரிமினல்’. பர்சா பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. கெளதம் கார்த்திக் தனது பகுதிகளுக்கு டப்பிங் பேச தொடங்கியுள்ளார்.

 

Goutham Karthik

 

சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

 

இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related News

8992

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery