அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கும் ‘போர் தொழில்’ படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரமாண்டமான முறையில் தடம் பதிக்கிறது.
‘போர் தொழில்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு உடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதல் பார்வை போஸ்டரில் சரத்குமாரும், அசோக் செல்வனும் காவலர்களாக வித்தியாசமான கெட்டப்பில் இருப்பது பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும். இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...