Latest News :

இயக்குநர் ஆறுமுக குமாருடன் மீண்டும் கைகோர்த்த விஜய் சேதுபதி!
Sunday May-21 2023

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கி தயாரித்த பி.ஆறுமுக குமார், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ படத்தை தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி கைகோர்த்துள்ளார்.

 

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா மலேசியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ என்ற மாநகரில் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 

Vijay Sethupathi New Movie

 

இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார். 

 

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C’ஸ் என்டர்டெய்ன்மெண்ட்   நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

Related News

8996

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery