வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டுக் கொண்டிருக்க, சில தமிழர்கள் பிற மாநிலங்களில் தங்களது வாழ்வுரிமைக்காக போராடும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் தங்களது வாழ்வுரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து ’உருமல்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
டபுள் எஞ்சின் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை கிரவுன் ராஜேஷ் இயக்குகிறார். இதில், நாயகர்களாக குருகாந்த், கார்த்திக் ஸ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க, நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். ராஜா சாகிப், கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் கிரவுன் ராஜேஷ் கவனிக்கிறார். கிரவுன் ஜேஆர் இசையமைக்க, புரூஸ்லி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். விஜயன் சேட்டையன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் உத்திரபிரதேசத்தில் படமாக்கப்பட இருக்கும் ‘உருமல்’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ் மாதம் உத்திரபிரதேசத்தில் தொடங்க உள்ள நிலையின், படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேரளாவில் பூஜையுடன் நடைபெற்றது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...