Latest News :

கார்த்தியின் பிறந்தநாளில் வெளியான ‘ஜப்பான்’ அறிமுக வீடியோ! - ரசிகர்கள் உற்சாகம்
Thursday May-25 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், வெவ்வேறு ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்ற நடிகர் கார்த்தி, தற்போது இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். 

 

தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும், தரமான படங்களையும் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘ஜப்பான்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜப்பான் அறிமுக வீடியோவை வெளியிட்டு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, படக்குழுவினரையும் வாழ்த்தியுள்ளார்.

 

கார்த்தியின் வித்தியாசமான லுக் மற்றும் “ஜப்பான் மேட் இன் இந்தியா” போன்ற வசனங்களால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ‘ஜப்பான்’ அறிமுக வீடியோ சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.

 

தீபாவளி பண்டிகையில் வெளியான ‘கைதி’, ‘சர்தார்’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ‘ஜப்பான்’ திரைப்படமும் தீபாவளியன்று வெளியாக இருப்பது கார்த்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

 

Related News

9004

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery