Latest News :

”எனக்கு ஆண்களை பிடிக்காது என்று நினைக்காதீங்க” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Monday May-29 2023

பிவிஆர் திரையரங்குகளில் தென்னிந்திய தலைமை அதிகாரியான மீனா சாப்ரியா, தனது வாழ்க்கை சுயசரிதத்தை ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் சினிமாஸ் பிவிஆரில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ’குட் நைட்’ பட தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், நடிகை மற்றும் தயாரிப்பாளர் சினேகா நாயர், யூடியூப் பிரபலம் ஸ்ரீராம், ஆட்டோ அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.  ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார். 

 

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் ’UNSTOPPABLE’ ஆக இருப்பது தான் காரணம். அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

 

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவரானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்.” என்றார்.

 

Meena Chabbria

 

நடிகை மற்றும் தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசுகையில், “இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம். ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது. இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் யுவராஜ் பேசுகையில், “நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி.” என்றார்.

 

ஆட்டோ அண்ணாதுரை பேசுகையில், “எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது. மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.” என்றார். 

 

மைக் செட் ஸ்ரீராம் பேசுகையில், “மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ’UNSTOPPABLE’ என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர். இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார். இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.  

 

மீனா சாப்ரியா பேசுகையில்,  “நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி. 

அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், ’இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்’ அண்ணாதுரை.  நீண்ட நாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது. 

 

நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. ’UNSTOPPABLE ANGELS’ மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன்.  நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான்.” என்றார்.

 

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராக பணியாற்ற தொடங்கிய மீனா சாப்ரியா, PVRன் தென்னிந்திய தலைமை அதிகாரியாக உயர்ந்தார். 

 

தற்போது தனது கார்ப்பரேட் பணிக்கு ஓய்வு அளித்திருக்கும் மீனா சாப்ரியா ‘அன்ஸ்டாப்பபல் ஏஞ்சல்ஸ்’ (UNSTOPPABLE ANGELS) என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9006

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஷாட் பூட் த்ரீ’ நட்சத்திரங்கள்!
Monday September-25 2023

‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘பெருச்சாழி’, ‘நிபுணன்’ ஆகிய படங்களை இயக்கிய அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஷாட் பூட் த்ரீ’...