சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’போர் தொழில்’ திரைப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், ’போர் தோழில்’ திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதிரடி ஆக்சனுடன் சஸ்பெண்ஸ் நிறைந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணம் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் உருவாகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...