ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தகிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள 'வீரன்' திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 'வீரன்' திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. படத்தை விசில் அடித்துப் பார்த்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்த நிகழ்வில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி வீரன் உடையில் கலந்துக்கொண்டு சிறுவர்களை உற்சாகப்படுத்தினார். அவருடன் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், நடிகை ஆதிரா ராஜ், நடிகர் சசி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோரும் கலந்துக்கொண்டு படம் பார்த்த குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், படம் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் மேடையில் நன்றி தெரிவித்தனர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...