க்ரைம் திரில்லர் படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளியான பல தமிழ் திரில்லர் படங்கள் அந்த வட்டத்திற்கு பெரும் ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், ஒவ்வொரு காட்சி மட்டும் அல்லாமல் படத்தின் கடைசி நிமிடம் வரை நம்மை திகிலடைய செய்து சீட் நுணியில் உட்கார வைக்கும் ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது ‘போர் தொழில்’ திரைப்படம்.
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். மர்ம கொலைகளை விசாரிக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் சைக்கோ கொலையாளிக்கு இடையிலான திரில்லர் பயணமாக அமைந்துள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் அல்பிரெட் பிரகாஷ் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
இன்று (ஜூன் 9) முதல் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியீட்டுக்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் திகில் காட்சிகளில் உரைந்ததோடு, படத்தின் சஸ்பென்ஸை கடைசி வரை யூகிக்க முடியாமல் வித்தியாசமான உணர்வை அனுபவித்தார்கள். இப்படி ஒரு க்ரைம் திரில்லர் படம் இதுவரை பார்த்ததில்லை, என்று பலர் இயக்குநரை பாராட்டினார்கள்.
அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் கொலைகளின் பின்னணியை அவர்கள் துப்பறியும் விதம் என படத்தின் இடம்பெற்ற கதபாத்திரங்களையும் மிக சிறப்பாக கையாண்ட இயக்குநர் திரைக்கதை மற்றும் காட்சிகளை இதுவரை நாம் பார்த்திராத வகையில் வடிவமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.
திரில்லர் பட விரும்பிகளுக்கு மட்டும் அல்ல நல்ல திரைப்படத்தை பார்க்க விரும்புகிறவர்கள் அனைவருக்கும் ‘போர் தொழில்’ புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...