Latest News :

சொல்லப்படாத கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘இராக்கதன்’! - கோலாகலமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா
Sunday June-11 2023

மருதம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் MAG பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாகுவேல் தயாரிப்பில், தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராக்கதன்’. ஆர்.தண்டாயுதபாணி கிரியேடிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இப்படம் மாடலிங் துறையின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் தயாராகியுள்ளது.

 

வம்சி கிருஷ்ணா, ரியாஸ்க் ஆன், நிழல்கள் ரவி, காயத்ரி ரீமே போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன் ஆகியோர் நாயர்களாக அறிமுகமாகிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் துன்பங்களை மட்டுமே படமாக்கி வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை பற்றி பேசும் பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.

 

மனாஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். பாபு கிறிஸ்டியன், இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுத, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இன்ப பிரகாஷ் கலை இயக்குநராக பணியாற்ற, சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

இந்த நிலையில், ’இராக்கதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 7 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, மாடலிங் துறையைச் சேர்ந்த கருண் ராமன் உள்ளிட்ட பல திரயுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.

 

மேலும், நிகழ்ச்சியில் பேசிய திரை பிரபலங்கள், தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘இராக்கதன்’ திரைப்படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் படத்தை பார்க்க கூடிய ஆவலை தூண்டுகிறது, என்று கூறி வாழ்த்தினார்கள்.

 

பாடல்கள் மற்றும் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைத்திருக்கும் படக்குழு ‘இராக்கதன்’ படத்தை ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Related News

9022

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery