Latest News :

4 மொழிகளில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday June-12 2023

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் இயக்குநர் ஐ.அகமது ஆகியோர் முதன் முறையாக ’இறைவன்’ படத்திற்காக இணைந்துள்ளனர். தங்கள் சரியான திட்டமிடல் மற்றும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்த படக்குழு, இப்போது தங்கள் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு இந்திய மொழிகளில் வரும் ஆகஸ் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘இறைவன்’ திரைப்படம் வெளியாகிறது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

 

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியின் நட்சத்திர மதிப்பு பான் இந்தியா அளவில் உயர்ந்துள்ளது. நயன்தாராவுக்கு அனைத்து பகுதிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், மொழிகள் தாண்டி இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

 

மேலும், ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி போன்ற திறமையான நடிகர்களை உள்ளடக்கியுள்ளதால், உலகளவில் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.

 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related News

9026

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery