Latest News :

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு துணை நிற்பேன் - கமல்ஹாசன் அறிவிப்பு
Monday June-12 2023

நாம் மறந்து போன, நம்மை விட்டு மறைந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்பதில் ஒரு போராளியாகச் செயல்பட்டவர் நெல் ஜெயராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 நெல் ரகங்கள்.

 

தனக்குப் பின்னரும் இந்தப் பேரியக்கம் தொடர்வதற்கான விதைகளை அவர் ஊன்றிச் சென்றிருக்கிறார். அதன் சாட்சியாக ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அவரது வழிதோன்றல்களும் மாணவர்களும் ஜெயராமன் ஏற்றிய நெருப்பை அணையாமல் பாதுகாத்து வருகிறார்கள்.

 

பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது இந்த இயக்கம்.

 

இந்த அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை இன்று நேரில் சந்தித்தனர். அப்பபோது அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் ”திருகியெழுதப்பட்ட புனை வரலாற்றிலிருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பதுதான் இன்றை ய அரசியல். தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வேளாண்மைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு. வரலாற்றை மீட்டெ டுப்பது போலவே  நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவே ண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன்.

 

கை விடப்பட்ட ஊர்க்கிணறுகளை மீட்டெடுக்கும் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டே ன். உடனடியாக எனது ஆதரவையும், பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை . என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன், என தெரிவித்தார்.

 

இயற்கை விவசாயம், தற்சார்புப் பொருளாதாரம், மரபு வேளாண்மை , சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டினங்கள் பரமாரிப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, கிராம மேம்பாடு உள்ளிட்டவை மக்கள் நீதி மய்யம் அக்கறை கொள்பவை, இவற்றில் எங்கள் பங்களிப்பு என்றென்றும் தொடரும்.

 

வருகிற ஜூன் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இவர்கள் நடத்தும் ‘தேசிய நெல் திருவிழா - 2023’ நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கலந்துக கொள்ள வேண்டும். பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

 

இந்தச் சந்திப்பின் போது திரைப்பட இயக்குநர்கள் ஹெச். வினோத் மற்றும் இரா. சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், உயர்மட்டக்குழுத் தலைவர் பந்தநல்லூர் அசோகன், உயர்மட்டக்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் இருபதிற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளும் கமல்ஹாசனை சந்தித்து உரையாடினார்கள்.

Related News

9027

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery