பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தினம் அளித்து வரும் பேட்டியால் அந்நிகழ்ச்சியின் தாக்கம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதிலும், பிக் பாஸின் முக்கிய நபரான திகழும் ஓவியா பற்றி எந்த தகவலாக இருந்தாலும் அது வைரலாக பரவிவிடுகிறது.
அந்த வகையில், ஓவியா குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு புது சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி, ஓவியாவை பார்த்து அடித்துவிடுவேன், என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இது குறித்து சக்தி எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஓவியாவிடம் தான் அப்படி நடந்துக்கொண்டது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சக்தி, “ஓவியாவுக்கு பைபோலார் நோய் இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருந்தார், அதனால் தான் அவரது மனநிலை நிலையாக இல்லாமல் மாறி கொண்டே இருந்தது. அவரை அவரது நிலைக்கு திரும்ப கொண்டுவரவே நான் அப்படி சொன்னேன்.
நானும் அதற்காக தான் அவரிடம் அன்றே மன்னிப்பு கேட்காமல் 100-வது நாளில் அனைவர் முன்னிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.” என்று கூறியுள்ளார்.
சக்தியின் இந்த பேட்டியால், ஓவியா ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதோடு, சமூக வலைதளங்களில் சக்திக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...