’மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா!
Tuesday June-13 2023

’பூவரசம் பீபி’. ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’, ‘புத்தம் புதிய காலை’ தொடரின் ஒரு பகுதி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் படம் ‘மின்மினி’. நடிகர்களின் உண்மையான வயதையும், பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக 8 வருடங்களாக காத்திருந்து இப்படத்தை இயக்கும் முயற்சி திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, ஆங்கர் பே ஸ்டுடியோஸ்  உடன் இணைந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா, இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

 

கதீஜா ரஹ்மான், ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ள நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

9030

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery