Latest News :

”இந்த பட அனுபவம் என்றைக்கும் மறக்காது” - ’பாயும் ஒளி நீ எனக்கு’ பற்றி நடிகர் விக்ரம் பிரபு
Sunday June-18 2023

அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. கே.எம்.எச் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாகர் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

வரும் ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “இந்தவொரு நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர். அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது.  இந்த படத்தில் எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் புரிந்து கொண்டு பணியாற்றினார். அவர் பேச்சிலேயே அது தெரிந்திருக்கும். இந்த பட அனுபவம் என்றைக்கும்  மறக்காது அப்படிப்பட்ட படம் இது. இன்று இயக்குநர் கார்த்திக் சொன்ன ஒரு விஷயம்தான் அதாவது கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது,  கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக்  கொடுத்திருக்கிறார்.   இந்த படம் நன்றாக  வந்திருக்கிறது. தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். ஸ்டண்ட்  மாஸ்டர் தினேஷ் காசி இவன் வேற மாதிரி படத்திலிருந்து நன்றாக தெரியும் . இன்றைக்கு படத்தில் மாஸ்டராக இருக்கிறார். எல்லா சண்டை காட்சி களையும் நன்றாக எடுத்திருக்கிறார். என் மனத்துக்கு நெருக்க மான படம். இந்த படத்தை வெளியிடும் கிஷோருக்கு நன்றி. நாங்கள் நல்ல படம் தந்திருக்கிறோம்  உங்கள்  ஆதரவு தேவை.” என்றார். 

 

நடிகை வாணி போஜன் பேசுகையில், “இந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது.   விக்ரம்பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை.இந்த படத்தில் விக்ரம் ஆக்டிங், ஆக் ஷன் எல்லாமே பிடித்திருந்தது. என்னையும் ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. எல்லோரும் சப்போர்ட் பண்ண கேட்டுகொள் கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் கார்த்தி அத்வைத் பேசுகையில், “நான் ஹைதராபாத் திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது.  ஒரு முதல் பட இயக்குநருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும்  யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை, அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவின ருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி. ஒளிப்பதிவாளருக்கும் எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார்.  ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி. கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும்.  படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குநர் தாஸ்தா,  படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர்  பேசுகையில், “நல்ல படங்களுக்கு ஆதரவு தரும் பத்திரி கையாளர்களுக்கு வணக்கம். இந்த படத்தில் என்னுடன் 3 அசிஸ்டன்ட்ஸ்கள்  மட்டுமே பணியாற்றினார்கள். அவர்களுக்கு முதலில் நன்றி. ஏனென்றால் இதுவொரு மிகப் பெரிய ஆக் ஷன் படம். இதன் 70 சதவீத படப்பிடிப்பு இரவில்தான் நடக்கும். பெரிய ஆக் ஷன் படம் என்பதால் நிறைய கேமரா, எக்கியூப் மென்ட்ஸ் பயன்படுத்தப்பட்டது அதற்கு ஒரு வலுவான டீம் தேவைப்பட்டது. அப்படி எனக்கு வலுவான என் உதவியாளர்கள் இருந்தார்கள். அடுத்து இயக்குநர் கார்த்திக், கேமரா மேனுக்கென்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இந்த படம்.  பார்வை குறைபாடுள்ள ஒருவனின் உலகம் எப்படியிருக்கும் என்பதை காட்ட இப்படம் எனக்கொரு வாய்ப்பாகபும்,  சவாலாகவும்  இருந்தது. விக்ரம் பிரபு, வாணி போஜன் மற்ற எல்லா நடிகர்களுமே ரொம்பவும் சின்சியர். மேக்கப் அணிந்து சரியான நேரத்துக்கு  வந்துவிடுவார்கள். கடைசி 10 நாள் 180 மணிநேரம்  நடிப்பது என்பது பெரிய விஷயம். விக்ரம்பிரபு காட்டிய இந்த ஈடுபாடுதான் எங்களையும் தொடர்ச் சியாக பணியாற்ற வைத்தது.  இந்த படத்தில் சண்டை காட்சி 40 நாட்கள் படமாக்கப் பட்டது. விக்ரம் பிரபு நடித்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி கண்ணாடிகள் நடுவில் படமாக்கப்பட்டது. அது பெரிய ஹேலைட்டாக  இருக்கும்.” என்றார்.

 

படத்தை வெளியிடு எஸ்.பி.சினிமாஸ் கிஷோர் பேசுகையில், “பாயும் ஒளி நீ எனக்கு  படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. அதற்கு பட இயக்குநர் கார்த்திக் அத்வைத், ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு முதலில் நன்றி சொல்கிறேன். இவர்கள் இப்படத்தை வெளியிட  ஒரு வாய்ப்பு கொடுத் திருக்கிறார்கள். இந்த படம் பெரிய திரையில் விரைவில் திரைக்கு வருகிறது. உங்கள் அனைவரின் ஆதரவு தர வேண்டும் நன்றி.” என்றார்.

Related News

9042

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery