Latest News :

குழந்தைகளை குதூகலமாக்க வருகிறாள் ’லில்லி’
Wednesday June-21 2023

கோபுரம் ஸ்டூடியோஸ் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ’லில்லி’. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர்.

 

கதை, திரைக்கதை எழுதி சிவம் இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் வசனத்தை இயக்குநர் முத்து எழுதியிருக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டோ பிரான்சிஸ் இசையமைத்துள்ளார். ஏ.பி.ராசா பாடல்கள் எழுதியுள்ளார். பி.எஸ்.வர்மா கலை இயக்குநராக பணியாற்ற, மதுரை செல்வம் மற்றும் மனவை புவன் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

 

படம் பற்றி இயக்குநர் சிவம் கூறுகையில், “இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குநர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும்.

 

இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

 

இத்தனை ஆண்டுகாலம் எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத் தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன்.

 

இந்த கதையையை நான் உருவாக்க முக்கியப் காரணமே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தான், ஏன்னா அஞ்சலி படம் பார்த்து இன்று வரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே  வர முடியல அந்த பாதிப்பில் தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம்.

 

இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்து வந்தோம் முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை நீங்கள் திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும்.” என்றார்.

 

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. தற்போது படத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படம் ஜூன் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Related News

9043

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery