திரைப்படங்களுக்கு நிகராக சில குறும்படங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், பத்திரிகையாளர் ஜியா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ‘கள்வா’ குறும்படம் எதிர்பார்க்கப்படும் குறும்படமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் ஆகியோர் நடித்திருக்கும் இந்த குறும்படத்தின் கதையை அப்சல் எழுதியிருக்கிறார். ஜேட்ரிக்ஸ் இசையமைக்க, ஷரண் தேவ்கர் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரேம் படத்தொகுப்பு செய்துள்ளார்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு இதுவரை 17 விருதுகளை வென்றுள்ள ‘கள்வா’ குறும்படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி முதல் கிங்ஸ் பிக்சர்ஸ் யுடியுப் சேனலில் வெளியாக உள்ளது.
இது குறித்து இயக்குநர் ஜியா கூறுகையில், “‘கள்வா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ரசிகர்களை நிச்சயம் கவரும்.” என்றார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...