அதிமுக-வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய சசிகலா, தற்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களால் உதாசினப்படுத்தப்பட்டு வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர், இன்று 5 நாட்கள் விடுமுறை பரோலில் வெளியே வந்துள்ளார்.
அரசியல் பிரமுகர்களை சந்திக்க கூடாது, செய்தியாளர்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன், உடல் நிலை சரியில்லாத தனது கணவரை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோல் பெற்றுள்ள சசிகலாவை, பிரபல சினிமா பிரமுகர் ஒருவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவுக்கு சம்மந்தி முறையான இவர் பிரபல நடிகர் மட்டும் இன்றி, பழம்பெரும் நடிகரின் வாரிசும் ஆவார். சமீபத்தில் தனது தந்தைக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தை வைத்து நிகழ்ந்த அரசியல் குறித்து மிகவும் வேதனை அடைந்துள்ளவர், தனது சம்மந்தியான சசிகலாவிடம் முறையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினரை சந்திக்க கூடாது என்று சசிகலாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், உறவினர்களை சந்திக்க கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. உறவினர் என்ற முறையிலேயே அந்த பிரபல நடிகர் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக இன்று நள்ளிரவு அல்லது நாளை இரவு இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...