திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ’நேற்று நான்.. இன்று நீ’!
Monday June-26 2023

கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் 'தேசத்தின் குரல்' பத்திரிக்கை நிறுவனர். எச்.பாட்சா திரையுலகிலும் தன்  பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக ’நேற்று நான்.. இன்று நீ’ என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார். 

 

குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிகர் நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப் போடு தரமான திரைப் படங்களை தயாரிப்பதே எச்.பாட்சாவின் நோக்கம். அதன் முதல் படியே இத் திரைப்படம்.

 

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக் காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இ.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெகன் கல்யாண் இசையமைக்க, ஜோன்ஸ் ஃபெனாண்டோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். முல்லை செல்வராஜ் வசனம் எழுதியிருக்கிறார்.

 

புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர். அரவிந்தராஜ், பிஜாய் மேனன், எச்.பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘நேற்று நான்..இன்று நீ’ சுவாரசியமான கதைக்களத்தோடு திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.

 

அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை அடைய வந்த நாயகி எதிர் கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும் தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியுள்ள ‘நேற்று நான்..இன்று நீ’ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Related News

9055

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery