Latest News :

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகிறது
Monday June-26 2023

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரெர் பிலிம்ஸ் (Wayfarer Films) இணைந்து தயாரிக்கிறது.

 

மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும்  இப்படம் கொண்டுள்ள இப்படத்தின் ஒவ்வொரு  தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில்,  இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது.  அதிலும் துல்கர் சல்மானை 'ராஜாவாக' சித்தரித்திருப்பது,  ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது.

 

இப்படத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும்,  பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட Zee Studios மற்றும் Wayfarer Films நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. 

 

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளனர். 

 

எதிர்பார்ப்புமிக்க இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Related News

9056

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery