தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாதால் ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடித்ததோடு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்காமல் இருந்த நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடிகர் அர்ஜூன் முடிவு செய்திருக்கிறாராம்.
ஐஸ்வர்யாவும், நடிகர் உமாபதியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

நடிகர் உமாபதி, பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் ஆவார். இவர் ‘ஆதாகப்பட்டது மகாஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது தேவதாஸ் என்ற படத்தில் நடித்து வருவதோடு, தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடித்து வரும் ‘ராஜாகிளி’ என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...