Latest News :

மிரட்டும் ‘கிங் ஆஃப் கோதா’ டீசர்!
Wednesday June-28 2023

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரெர் பிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் மலையாலம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

 

துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘சார்பேட்டா பரமபரை’ டேன்ஸிங் ரோஸ் புகழ் சபிர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, கோகுல் சுரேஷ், செம்பன் வினோத் ஜோஸ், ஷம்மி திலகன், அனிகா சுரேந்தர் உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வந்த நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற செய்திருக்கிறது.

 

டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில்  துல்கர் சல்மான்  வருவதைப் பார்க்கும்போது,  நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

 

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின்  இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத்  தூண்டுகிறது.  

 

 

கேரள சினிமாவின் மிகப்பெரிய பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் நிலையில், இப்படம் ஓனம் பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

9062

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery