Latest News :

அனைத்து படங்களும் வெற்றி! - வெற்றி நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள்
Thursday June-29 2023

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே, அவர்களில் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களங்கோடு தொடர் வெற்றியும் பெற்று வருவதால், அவரை கோலிவுட்டில் வெற்றி நாயகன் என்று அழைக்கிறார்கள்.

 

ஆனால், இந்த வெற்றி ஹரிஷ் கல்யாணுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை, பல தடைகளை தாண்டி தான் தற்போது அவர் கவனம் ஈர்க்கும் இளம் நாயகனாக கோலிவுட்டில் உருவெடுத்திருக்கிறார்.

 

2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், அப்படத்தின் சர்ச்சையால் சுமார் 3 வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அவருடைய சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்ற பேச்சு அடிபட்டாலும், அதை கண்டுக்கொள்ளாதவர் தனது கடின உழைப்பால் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.

 

Actor Harish Kalyan

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஹரிஷ் கல்யாணின் செயல்கள் மற்றும் அனைவரிடமும் அவர் பழகுவது மக்களுக்கு பிடித்துவிட, ரசிகர்களின் பேவரைட் போட்டியாளர் ஆனதோடு, அவருக்கான தனி ரசிகர் வட்டமும் உருவானது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, ஹரிஷ் கல்யாணுக்கு புதிய அடையாளத்தையும் கொடுத்தது. அப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

காதல் படங்களுக்கு பொருத்தமாக இருப்பார், என்று நினைத்த நிலையில், ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்து ஹரிஷ் கல்யாண், ‘தனுசு ராசி நேயர்களே’ மற்றும் ’தாராள பிரபு’ ஆகிய படங்கள் மூலம் தனக்கு காமெடியாகவும் நடிக்க தெரியும் என்பதை நிரூபித்தார். 

 

Actor Harish Kalyan

 

காதல், காமெடி, ஆக்‌ஷன் என எந்த ஜானர் படங்களாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொண்டு நடிப்பிலும் அசத்திய ஹரிஷ் கல்யாண், ‘கசட தபற’ என்ற ஆந்தாலாஜி கதையில் ‘பந்தயம்’ என்ற கதையில் வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடத்தில் நடித்து தனக்கு வில்லத்தனமும் தெரியும் என்பதை நிரூபித்தார். அந்த கதையில், அவருடைய நடிப்பை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியது.

 

அனைத்துவிதமான களங்களிலும் பயணித்து தனது நடிப்பு திறமையால் பாராட்டு பெற்று வருவதோடு, தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஹரிஷ் கல்யாண், படம் என்றாலே நிச்சயம் வெற்றி படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

 

தற்போது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘டீசல்’, கிரிக்கெட் வீரட் டோனி தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ (Let's Get Married), ’ரப்பர் பந்து’ என பல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Actor Harish Kalyan

 

தனது தொடர் முயற்சியாலும், கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் நாயகனாகியிருக்கும் ஹரிஷ் கல்யாண், இன்னும் பல வெற்றிகளுடன் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

Related News

9063

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery