ஹரிஷ் கல்யாண் ஆக்‌ஷனில் மிரட்ட வரும் ‘டீசல்’!
Thursday June-29 2023

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஹரிஷ் கல்யாண் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிறது ‘டீசல்’. அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கும் இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு தயாரிக்கிறார்.

 

இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.சசிகுமார், எஸ்.கருணாஸ், வினய் ராய், அன்னய்யா, டி.பி.அருண்பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, தீனா, தங்கதுரை, லக்‌ஷ்மி சங்கர், தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார், சச்சின், ரமேஷ் திலக், செல்வி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பின்னணி வேலைகள் முடிவடைந்து வெளியீட்டுகான பணிகளை தொடங்க இருக்கும் தயாரிப்பு தரப்பு, படம் உருவாகியிருக்கும் விதத்தால் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, தமிழ் சினிமாவின் முக்கியமான ஆக்‌ஷன் படமாக ‘டீசல்’ இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் ‘டீசல்’ படக்குழுவினர் ஹரிஷ் கல்யாணின் ஆக்‌ஷன் அதிரடியால் ‘டீசல்’ விரைவில் மிரட்ட வருகிறது, என்றும் தெரிவித்துள்ளனர்.

 

திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, ரேம்போன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ராஜ்சேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Related News

9064

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery