இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சொகுசு கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!
Sunday July-02 2023

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியீட்டு முன்பே பல அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக படம் அமைந்ததால், மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். 

 

Udhayanithi and Mari Selvaraj

 

ரெய் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோருடன் உதயந்தி ஸ்டாலின்,  இயக்குநர் மாரி செல்வராஜ் வீட்டுக்கு நேரடியாக சென்று காரை பரிசளித்தார்.

 

உதயநிதியுடன் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டியிருக்கும் ‘மாமன்னன்’ படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

Udhayanithi and Mari Selvaraj

Related News

9073

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery