அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’. இதில் நாயகியாக மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்.
குறட்டையை மையமாக கொண்ட குடும்பத்தோடு பார்க்க கூடிய நகைச்சுவை கலந்த எதார்த்தமான படமான இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மணிகண்டனின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு, அவருக்கு நாயகன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று (ஜூலை 3) முதல் ‘குட் நைட்’ திரைப்படம் வெளியாகிறது.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘குட் நைட்’ திரையரங்குகளில் வெற்றி பெற்றது போல் ஒடிடி தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...