ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் ‘ஜீனி’! - பூஜையுடன் தொடங்கியது
Wednesday July-05 2023

’பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்துள்ள ஜெயம் ரவி, ‘இறைவன்’, ‘சைரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிக்கும் அந்நிறுவனத்தின் 25 வது படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ஜீனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவயானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் அர்ஜுனன் ஜெ.ஆர் இயக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, உமேஷ்.ஜெ கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்ய, யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நிர்வாக தயாரிப்பாளராக கே.அஸ்வின் குமாரும், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கே.ஆர்.பிரப்வும் பணியாற்றுகிறார்கள்.

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

ஜெயம் ரவியின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக மட்டும் இன்றி மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் ‘ஜீனி’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

Related News

9085

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery