இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, பகத் பாசி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை திரை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ‘மாமன்னன்’ படத்தை பாராட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். தனது வீட்டுக்கு இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு மலர்கொத்து வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, அவரிடம் சில மணி நேரங்கள் உரையாடினார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த சந்திப்பு தமிழ் சினிமாவிலும் மேலும் பல விவாதங்களையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...