வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் நடிகர் வசந்த் ரவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வரும் வசந்த் ரவி, தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வசந்த் ரவியின் 7 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்குகிறார். ‘ஐரா’, ‘நவரசா’ போன்றவற்றில் பணியாற்றியிருக்கும் சபரீஷ் நந்தா, ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னண்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார்.
ஜெ.எம்.எம் புரொடக்ஷன்ஸ் ஆர்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இதில் வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசண்டா நடிக்க, விஸ்வாசம் படத்தில் அஜித் குமாரின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வரும் ராம் சரண் படத்திலும், மாவீரன் மற்றும் ஜப்பான் படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் நடன இயக்குநர் கல்யாண் முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிராபகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அஜ்மல் இசையமைக்கிறார். சூர்யா ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...