வெளியீட்டுக்கு முன்பே வியாபாரத்தில் சாதனைப் படைத்த ‘ஜவான்’!
Saturday July-08 2023

ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் ‘ஜவான்’ திரைப்படம் பற்றிய தகவல்கள் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரம் தொடர்பாக வெளியாகியிருக்கும் புதிய தகவல் ஒன்று ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது. 

 

SRK படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில்  தான் விற்கப்படுகின்றன, அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் சாதனையைத் தகர்த்து வருகிறது.  அவரது வரவிருக்கும் இரண்டு படங்களின் வியாபாரத்தில் சொல்லப்படும்  எண்கள் திரை உலகைத் திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது.

 

SRK இன் அடுத்த வெளியீட்டைச் சுற்றி ரசிகர்களிடம் நிலவும்  எதிர்பார்ப்பு தொழில்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள்  படத்தின் உரிமைகளைப் பெறப் போட்டிப் போட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய எண்கள் சமீப காலங்களில்   எந்த  ஒரு திரைப்படத்தையும் விஞ்சியதாக, பெரும் எண்ணிக்கையில் வியக்க வைக்கிறது. தொடர்ந்து  பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக  வலம் வரும்  SRK இன் புகழ்  அசைக்க முடியாததாக உள்ளது.

 

நடிகர் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌரி கான் ஆகியோர் தயாரித்துள்ள ‘ஜவான்’ படத்தின் அதிரடியான டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. 

Related News

9094

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery