‘குரங்கு பொம்மை’ படம் மூலம் தமிழ் சினிமாவின் கனவத்தை ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் நிறுவனம் சார்பில் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், நட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, வி.செல்வகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நித்திலன் சாமிநாதன் மற்றும் ராம் முரளி வசனம் எழுத, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சந்திரா- ரேகா டி'ஒன் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ’மகாராஜா’ என்ற தலைப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருப்பதோடு, இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்திருப்பதால் இப்படம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, டிரைலர், பாடல்கள் வெளியீட்டு தேதியுடன் திரைப்பட வெளியீட்டு தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...