நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ‘மதுரை வீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து வெளிநாட்டில் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் தன்னை மெருக்கேற்றிக் கொண்டவர் தற்போது தனது இரண்டாவது படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில், வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் இப்படத்தை
இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணி மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை பதிவு செய்யும் திரைப்படமாக யு.அன்பு கதை எழுதி இயக்குகிறார்.
கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ள படக்குழு, கேரள காடுகளில் முதற்கட்ட படப்பிடிப்பை துவக்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை எழுதி யு.அன்பு இயக்க, பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ராஜு கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...