கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால், தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் திரையுலகில் பயணித்து வருகிறார்.
’எஃப்.ஐ.ஆர்’, ‘கட்டா குஸ்தி’ என சமீபத்திய வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால், தற்போது ’மோகன்தாஸ்’, ‘ஆரியன்’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களில் நடித்து வருவதோடு, மேலும் சில படங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் விஷ்ணு விஷால், இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை நடிகர் விஷ்ணு விஷால் தொடங்கியிருக்கிறார்.
இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால் அதில், “என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இதன் தலைவராக சீத்தாராம் மற்றும் செயலாளராக கே.வி.துரை ஆகியோர் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் தொடர்புக்கு : +91 7305111636 - 044 35012698)

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இதில், ஹேமாமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி, விளையாட்டு வீரர்களுகு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி வருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளிய்ட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...