Latest News :

ஆக்‌ஷனில் மிரட்ட வரும் நயன்தாரா! - வைரலாகும் ’ஜவான்’ படத்தின் புதிய போஸ்டர்
Tuesday July-18 2023

’பதான்’ வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான் அட்லீ, இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன், தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கெளரி கான், கெளரவ் வர்மா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

’ஜவான்’ படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

 

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பிரமாண்டமான சாகசக் காட்சிகள் நிறைந்த டீசர் உலக அளவில் டிரெண்டாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜவான்’ வெளியாக உள்ளது.

 

Jawan

 

இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் மற்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்ட போஸ்டர்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி, நயன்தாராவின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் நயன்தாரா மீண்டும் அதிரடி ஆக்‌ஷனில் கலக்கப் போகிறார் என்பதை சொல்லும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Related News

9122

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery