Latest News :

’கொலை’ படத்தை குறைந்தது இரண்டு முறை பார்க்க வேண்டுமாம்! - ஏன் தெரியுமா?
Tuesday July-18 2023

விஜய் ஆண்டனில் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தற்போது ஒடிடி தளத்திலும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கொலை’. 

 

‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், தற்போது படத்தின் புதிய டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

வரும் ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கொலை’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய இயக்குநர் பாலாஜி குமார், “விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்தார். படத்தில் ப்ளாஷ்பேக் அதற்குள் ஒரு ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது. மிக கவனமாக பார்க்க வேண்டிய படமாகவும் இருக்கும். நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் படத்திற்காக அற்புதமாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். தமிழ் ரசிகர்களை மதிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கொலை அவர்களுடைய ரசனை ஆற்றலுக்கு ஏற்ற ஒரு வித்தியாசமான படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசுகையில், “’கொலை’ படத்தை முதல் முறை பார்க்கும் போதும், அடுத்தடுத்த முறை பார்க்கும்போதும் புதிய விஷயங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தெரிய வரும். அதனால், குறைந்தது இரண்டு முறை பாருங்கள். வருகை தந்திருக்கும் நடிகர் ஆர்யாவுக்கு நன்றி!” என்றார்.

 

படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கர் பேசுகையில், “லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பாக நான் பேச வந்துள்ளேன். எங்களுக்கு இதுநாள் வரை ஊடக நண்பர்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. ’சார்பாட்டா’ படத்தில் ஆர்யா மாஸ் செய்துள்ளார். இதன் இரண்டாம் பாகத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம். ’கொலை’ படக்குழுவினருக்கு நன்றி! விஜய் ஆண்டனி சார்தான் என்னை ‘சைத்தான்’ படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இப்போது மீண்டும் ‘கொலை’ மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் இருப்பது எனக்கு பெருமை.” என்றார்.

 

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில் “பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல! எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலோன் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி.” என்றார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், “இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்றார்.

 

நடிகை மீனாட்சி, “தமிழில் இது என் அறிமுக படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு. என் கதாபாத்திர பெயர் லைலா. சிறப்பான தயாரிப்பாளர், இயக்குநர் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!.” என்றார்.

 

எடிட்டர் ஆர்.கே. செல்வா பேசுகையில், “ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையில் நம்மால் பலவற்றை கணிக்க இயலும். ஆனால், அதை எல்லாம் தாண்டி படம் சிறப்பாக இருக்கும். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யா சாருக்கு நன்றி” என்றார்.

 

இசையமைப்பாளர் கிரீஷ் கோபால கிருஷ்ணன் பேசுகையில், “சமீப காலத்தில், எதுவும் கெஸ் பண்ண முடியாத தமிழ் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ‘கொலை’ படமும் வெற்றி பெறும். ஒளிப்பதிவு, இசை என தனித்தனியாக பிரித்து பார்க்காமல்  எப்பொழுது படமாக நன்றாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்கிறார்களோ அப்போதே அது சிறந்த படமாக இருக்கும். ‘கொலை’யும் அதில் ஒன்று.” என்றார்.


Related News

9123

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery