யோகி பாபு காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நாயகனாக நடிக்கும் பல படங்கள் வெற்றி பெறுவதால் தொடர்ந்து அவருக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வருகிறது. அதே சமயம், காமெடி வேடங்களில் நடிப்பதையும் தவிர்க்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் ராதா மோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ என்ற இணையத் தொடரில் யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த தொடரில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த தொடரில் வாணி போஜன் யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்கிறார், என்பதை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்த தொடரில் யோகி பாபு மற்றும் வாணி போஜன் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்திருக்கும் இயக்குநர் ராதா மோகன், 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...