Latest News :

'சினிமா டுடே' வின் சர்வதேச கண்காட்சியில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையம்! - பிரபலங்கள் வாழ்த்து
Sunday July-23 2023

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமா ஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ஊடகம், சினிமா மற்றும் அதன் ஒலி , ஒளிபரப்புகளுக்கு  தேவையான கேமிரா முதல் லேட்டஸ்ட் டிஜிட்டல் சாதனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை வெற்றிகரமாக நடத்தி வருவது நாம் அறிந்ததே. 

 

அந்த  பிரமாண்ட விற்பனை கண்காட்சி., இந்த ஆண்டும் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி வெள்ளி முதல் 23 ஆம் தேதி  ஞாயிறு வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 69- ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தகம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள் எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதிய திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் ... என சினிமாத்துறையின் அனைத்து தகவல்களையும் கொண்ட பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இங்கு நடை பெறுவது டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி என்றாலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா சம்மந்தமான பல அறிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை சினிமா விரும்பிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் ' இந்த புத்தக விற்பனை மையத்தை திட்டமிட்டு அமைத்துள்ளது.

 

Cinema Today Exhibition

 

பிரபல திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி ,  கண்காட்சியின் முதல் நாளான ஜூலை 21 ஆம் தேதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சினிமா டுடே கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார். 

 

மேலும், பிரபல நடிகரும், நடிப்பு பயிற்சி ஆசிரியருமான 'மெட்ராஸ்' ஜெயராவ் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு, இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ என்ற புத்தகத்தை சீனு ராமசாமியின் ஆட்டோகிராஃபுடன்  வாங்கி சென்றார். 

 

சினிமா பத்திரிகையாளர்களின் முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி, “நான் எழுத்துலக ஊடகத்தின் மூலம் வளர்ந்தவன் என்பதால் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்' தின் இந்த முயற்சியை ஊக்குவிக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டேன். உலகமே டிஜிட்டலுக்கு மாறினாலும் புத்தக வாசிப்பு என்பது எப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானது . அது ,எந்த நிலையிலும் மாறாது. இளைய தலைமுறையினருக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா தொடர்பான பல தகவல்களை கொண்ட புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ள  'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்கிறேன். இந்த புத்தக விற்பனை மையத்தில் சினிமா பற்றிய பல தகவல்கள் கொண்ட ஏராளமான புத்தகங்கள் இருக்கிறது. திரைப்படத்துறையை சார்ந்தவர்களுக்கு இந்த புத்தகங்கள் மிக அவசியமானதாக இருக்கும், குறிப்பாக உதவி இயக்குநர்கள் இதுபோன்ற புத்தகங்களை படித்தால், அவர்களுக்கு சினிமா என்றால் என்ன? என்பது எளிதில் புரிந்துவிடும்.” என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமியை தொடர்ந்து, 2ம் நாளான சனிக்கிழமை அன்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள சங்கத்தலைவர் - நடிகர் - தயாரிப்பாளர்- கல்வியாளர் என பன்முகங்கொண்ட  கே.ராஜன் , தேசிய விருது படத்தொகுப்பாளரும் இயக்குனருமான பி.லெனின் மற்றும் 65 க்கும் மேற்பட்ட கன்னடம், மலையாளம் படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் விரைவில் வெளிவர இருக்கும் 'லாக்டவுன் டைரி' படத்தில் கதாநாயகராக அறிமுகமாக உள்ள விஹான் அமித் ஜாலி  உள்ளிட்ட பிரபலங்கள் , நம் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்' தின் புத்தக மையத்தை பார்வையிட்டு சினிமா சம்மந்தமான  புத்தகங்களை வாங்கி சென்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர் ! இன்னும் இன்று,  ஜூலை 23ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே நடை பெற இருக்கும் இந்த கண்காட்சியின் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் புத்தக மையத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தர இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Cinema Today Exhibition

 

அது சமயம் ,  இச்செய்தியை படிக்கும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் உள்ள  சினிமா ஆர்வலர்கள் அனைவரும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் புத்தக விற்பனை மையத்திற்கு வருகை தந்து சினிமா சம்மந்தமான நூல்களை 10% கழிவுடன் வாங்கி சென்று பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

Related News

9129

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery