‘குட் நைட்’ படம் மூலம் ஹீரோவான மணிகண்டன், தற்போது வில்லனாக மிரட்ட ரெடியாகிவிட்டார். அதர்வா நாயகனாக நடிக்கும் இணையத் தொடர் ‘மத்தகம்’. பிரசாத் முருகேசன் இயக்கும் இந்த தொடரில் மணிகண்டன் வில்லனாக நடித்திருக்கிறார். நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஒடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் ஒரினிலாக உருவாகியுள்ள ‘மத்தகம்’ இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த தொடரின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.
இந்த டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு காவல்துறை அதிகாரியாகவும், மணிகண்டன் அவருக்கு வில்லனாகவும் தோன்றுகிறார்கள். மிரட்டலான காட்சிகளோடு வெளியாகியிருக்கும் இந்த டீசர் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
”ஒரு இரவில் என்ன செய்ய முடியும்” என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரின் ஆக்ஷன் காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
‘மத்தகம்’ என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மதத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...