Latest News :

’சந்திரமுகி 2’ வின் மரண பயம் தரும் திகில் காட்சிகள்! - இசையமைப்பாளர் கீரவாணி கூறிய சுவாரஸ்ய தகவல்
Wednesday July-26 2023

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற தலைப்பில் உருவாகிறது. பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பி சுபாஸ்கரன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் கீரவாணி, சந்திரமு 2 படத்தில் இடம்பெற்றுள்ள திகில் காட்சிகள் மரண பயத்தை கொடுக்கும் விதமாக இருப்பதாக தெரிவித்திருப்பதோடு, அக்காட்சிகளுடன் உயிரூட்டுவதற்காக இரண்டு மாதங்கள் தூக்கம் இல்லாமல் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை  ஆண்டனி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.  ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

அதில், ”லைக்கா புரொடக்ஷன்ஸின் 'சந்திரமுகி 2' பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.

 

Chandramuki 2

 

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால், ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி தனத்தன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ‘சந்திரமுகி 2’ உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

9134

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery