வருண் தேஜ் படத்தில் இணைந்த நோரா ஃபதேஹி!
Thursday July-27 2023

வருண் தேஜ் நடிக்கும் 14 வது படத்தை ‘பலாசா’ திரைப்பட புகழ் கருணா குமார் இயக்க உள்ளார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மோகன் செருக்குறி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கும் இப்படம் இன்று ஐதரபாத்தில் பிரமாண்டமான முறையில் தொடங்கியது.

 

இப்படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கும் நிலையில், பிரபல நடிகை நோரா ஃபதேஹியும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார். பல அட்டகாசமான டான்ஸ் நம்பர்களால் புகழ்பெற்ற நோரா ஃபதேஹி, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு ஒரு அட்டகாசமான டான்ஸ் நம்பரில் கலக்கவுள்ளார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் 1960-களின் காலகட்ட பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. 60-களின் சூழலையும்  அந்த உணர்வையும் கொண்டு வர படக்குழு கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது.

Related News

9135

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery