Latest News :

”அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது” - நடிகை ஐஸ்வர்யா மேனன் நெகிழ்ச்சி
Monday July-31 2023

‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா மேனன், ’தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘தமிழ்ப் படம் 2’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்து வருவதோடு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

கடந்த மாதம் வெளியான ‘ஸ்பை’ தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, நிகில் போன்ற இளம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பிஸியாகியுள்ளார்.

 

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்று வரும் ஐஸ்வர்யா மேனன், பம்பர் பரிசாக மம்மூட்டி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரமாக அவருடன் நடித்து வருகிறார்.

 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, “நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

Aishwarya Menon and Mamooty

 

மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர்…ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று உற்சாகமாக பேசினார்.

Related News

9141

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery