தமிழ் சினிமாவில் அனைத்து வகையான ஜானர் படங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவதோடு, அனைத்துவிதமான ரசிகர்களையும் திரையரங்கிற்கு வர வைக்க கூடிய திறன் படைத்த நடிகர்களில் கார்த்தி முக்கியமானவர். அவரது முதல் படமான ‘பருத்திவீரன்’ தொடங்கி ‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ வரை தனது ஜனரஞ்சகமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால், கார்த்தியின் படங்கள் அவருடைய ரசிகர்களிடம் மட்டும் இன்றி சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில், கார்த்தியின் 25 வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணந்து தயாரிக்கும் இப்பத்தை ராஜு முருகன் இயகுக்குகிறார். பல விருதுகளை பெற்றிருக்கும் ராஜு முருகன், முதல் முறையாக இயக்கும் மாஸான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
’ஜப்பான்’ திரைப்படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் கடைசி பாடல் காட்சியை பிரமாண்டமான முறையில் படமாக்க பல கோடி ரூபாய் மதிப்பிலான செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் படப்பிடிப்பு முடிந்துவிட்டால், ‘ஜப்பான்’ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும்.
இப்படத்தை முடித்த கையோடு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ள கார்த்தி, அடுத்ததாக தனது 27 வது படத்தில் நடிக்க இருக்கிறார். பிரேம் குமார் இயக்கும் இப்படத்தில் அரவிந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாராக உள்ளது.
அடுத்தடுத்து மூன்று படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் கார்த்தி கடந்த 2022 ஆம் ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தொடர்ந்து வெற்றிப் படக்களை கொடுக்க தயாராகி விட்டார். ’பொன்னியின் செல்வன் - பாகம் 1’, ’விருமன்’, ‘சர்தார்’ என்று 2022 ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர், 2023 ஆம் ஆண்டில் ‘பொன்னியின் செல்வன் - பாகம 2’ மூலம் தனது வெற்றியை ஆரம்பித்திருக்கும் நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி தொடர்ந்து படங்களில் நடிப்பதால், திரைத்துறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் வியாபரப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒடிடி, தொலைக்காட்சி உரிமம், இசை உரிமம் உள்ளிட்ட வியாபாரத்தில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். காரணம், படம் வெளியீட்டுக்கு முந்தைய வியாபாரத்தில் கார்த்தியின் படங்கள் ரூ.150 கோடி என்ற மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதனால், படம் வெளியீட்டுக்கு முன்பாகவே கார்த்தியின் படம் மற்றும் படம் தொடர்பான வியாபாரத்தை கைப்பற்ற பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை விரைவாக முடித்துக் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுப்பதோடு, தொடர்ந்து வியாபார ரீதியிலான மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்து வருவதால் கார்த்தியின் படங்கள் என்றாலே திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரைத்துறையை சார்ந்தவர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...