Latest News :

‘டிமான்டி காலனி 2’ படத்தை கைப்பற்றிய மென்பொருள் ஜாம்பவான்!
Tuesday August-01 2023

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ’டிமான்டி காலனி 2’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸெகெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா.ஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விஜய் சுப்பிரமணியன் மற்றும் ஞானமுத்து பட்டறை சார்பில் ஆர்.சி.ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இப்படத்தி அனைத்து உரிமைகளையும் கைபற்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிறர் டாப்-லீக் மென்பொருள் ஜாம்பவான் பாபி பாலச்சந்திரன்.

 

பாபி பாலச்சந்திரன் BTG Universal-ஐ தொடங்கியுள்ளார். இந்த மீடியா தயாரிப்பு நிறுவனம் ஹாலிவுட் சினிமா, இந்திய சினிமா மற்றும் பிரத்யேக டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பல வருட அனுபவத்துடன் ஏற்கனவே சினிமா தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான டாக்டர்.எம்.மனோஜ் பெனோ அவர்கள் இந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படங்களில் பணிபுரிந்துள்ளார். பல தரமான திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் ஹாலிவுட் மற்றும் இந்தியா இரண்டிலும் ஊடகத் துறையில் பாபி அடியெடுத்து வைக்கிறார். 

 

யுனைடெட் ஸ்டேட்ஸை தளமாகக் கொண்ட பாபி, பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத்தையும் பொழுதுபோக்கையும் கடந்து மற்றத் துறைகளிலும் வெற்றிகளை கொடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவர் இந்த பணியை அர்ப்பணிப்புள்ள குழுவிடம் ஒப்படைத்துள்ளார். கம்பெனியின் தொலைநோக்குப் பார்வையானது, பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் அனைத்து துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டிமாண்டி காலனி 2' படத்தின் முழு உரிமையையும் பெற்று தனது பிரம்மாண்டமான தொடக்கத்தை BTG யுனிவர்சல் அறிவித்துள்ளது.

 

பாபி பாலச்சந்திரன் கூறும்போது, “மென்பொருளுக்கும் பொழுதுபோக்குத் துறைக்கும் இடையேயான பிணைப்பு வலுப்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் ஒரு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நபர். தொழில்நுட்பத்தில் எனது நிபுணத்துவத்தை ஊடகத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்க்கும் போது அது மிகவும் வலுவாக இருக்கிறது. நான் ஏற்கனவே வலுவான இருப்பை வைத்திருக்கும் மென்பொருள் உலகில் எனது முதன்மை கவனம் தொடரும். ஆனால், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாயிலைத் திறந்து, திறமைகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டயும் திறமையாக சமாளிக்கும் அறிவும் பார்வையும் இருந்தால், பார்வையாளர்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை, நான் கையாள வேண்டிய ஆர்வமுள்ள பல துறைகளுக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது. எனவே டாக்டர். மனோஜ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால், எனது முக்கிய வணிகத்தைத் தொடர முடிகிறது. 

 

மேலும், இந்த முயற்சியை மேற்பார்வையிட சிறிது நேரமும் ஒதுக்க முடியும். நாங்கள் ஏற்கனவே பல வெகுஜன ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திட்டங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு நல்ல திரைப்படத்தை வாங்குவதன் மூலம் இதை தொடங்க விரும்பினோம். பல படங்களைப் பரிசீலித்த பிறகு, 'டிமான்டி காலனி 2' பொருத்தமான படமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். திகில் வகை படங்களுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் உள்ளனர். 'டிமான்டி காலனி' பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கொடுத்தது. ஒவ்வொரு படத்திலும் தனது கிராஃபை உயர்த்திக் கொண்டே இருக்கும் அருள்நிதியுடன் இணைந்து 'டிமாண்டி காலனி'யின் மேஜிக்கை மீண்டும் உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அஜய் ஞானமுத்து படத்தை திறமையாகக் கையாண்டுள்ளார். மேலும், 'டிமான்டி காலனி 2' உருவாகி வரும் விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படம் ஒரு சிறந்த கதைக்களத்துடன் அதிநவீன விஷுவல் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தத் திரைப்படம், அதிக தயாரிப்பு மதிப்பு மற்றும் அசத்தலான காட்சியமைப்புடன், தமிழில் மட்டுமல்ல, இந்திய திகில் சினிமாவிலும்  ஒரு புதிய அளவுகோலை உருவாக்கும்.

 

இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து கூறுகையில், “’டிமான்டி காலனி 2’ படத்துடன் பாபி பாலச்சந்திரன் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. சினிமாவை தனது கூடுதல் தொழிலாக மதிக்கும் மதிப்புமிக்க ஒருவரின் வருகை சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் தொழில்துறையின் மதிப்பை உயர்த்தும். பாபி பாலச்சந்திரன் மற்றும் டாக்டர்.மனோஜ் பெனோ ஆகியோரின் இத்தகைய முயற்சி, திரையுலகில் தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதுடன் மற்றவர்களை ஊக்குவித்து, நம்பிக்கைகுரிய இளம் திறமைகளையும் ஊக்குவிக்கும். தற்போது நாங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஓரிரு மாதங்களில் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் படத்தின் மிகப்பெரிய வெளியீட்டிற்கான சரியான வெளியீட்டு தேதியை பார்த்து வருகிறோம். வர்த்தக வட்டாரத்தில் இந்தத் திரைப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாக உள்ளது, எங்களுக்கு உற்சாகமாகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

Related News

9149

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery