ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் ‘டியர்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday August-01 2023

ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘டியர்’. இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

Nutmeg Productions நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ’செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

 

இந்த நிலையில், ‘டியர்’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழு கொண்டாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

 

சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் சரியான திட்டமிட்டலுடன் படப்பிடிப்பு நடைபெற்றதால் 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். திறமை மிகு இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனின் அற்புதமான திரைக்கதை, மற்றும் சிறப்பான இயக்கம் ஆகியவற்றால் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

ஜெகதிஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பு செய்ய, பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளை கவனித்துள்ளார். அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, ராப் ஐகான் அறிவு ஒரு பாடல் எழுதியுள்ளார்.

 

தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Related News

9150

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery