தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான மற்றும் வெற்றி திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, இளம் திறமையாளர்களின் படைப்புகளுக்கு அங்கீகாரம் பெற்று தரக்கூடிய விதத்தில் பல வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் படங்களை தேடி பிடித்து வெளியிட்டு வருகிறது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம்.
அந்த வகையில், ட்ரீம் வாரியர் பிசர்ஸ் நிறுவனம் வெளியீட்டில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘ஹர்காரா’. ‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் இல்லாத ஒரு மலைக்கிரத்திற்குச் செல்லும் தபால்மனிதன், அங்குப்படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பின்னணியில் இந்தியாவின் முதல் தபால்மனிதன் பற்றிய பல ஆச்சரியங்கள் நிறைந்த பாகமும் உள்ளது.
கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் (KALORFUL BETA MOVEMENT) நிறுவனம் சார்பில் என்.ஏ.ராமு மற்றும் சரவணன் பொன்ராஜ் தயாரிப்பில், ராம் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்திருக்கிறார். நாயகியாக கெளதமி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்துள்ளார். டானி சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, வி.ஆர்.கே.ரமேஷ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரவிந்த் தர்மராஜ் மற்றும் தீனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
முழுக்க முழுக்க தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஹர்காரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டாக திரையரங்குகளில் வெளியாகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...