பிக் பாஸ் போட்டி இவ்வளவு பெரிய அளவில் ரீச் ஆகும் என்று விஜய் டிவி-யே எதிர்ப்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு மக்களிடம் இப்போட்டி வரவேற்பு பெற்றதோடு, இதில் பங்கேற்றவர்களும் பிரபலமாகியுள்ளனர். அதிலும் ஓவியா தான் அதில் டாப்.
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வந்த ஓவியா, காதல் தோல்வியால் மன உலைச்சலுக்கு ஆளாகி பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஓவியா போல போட்டியில் தோல்வியுற்று வெளியேறவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வைல்ட் கார்டு மூலம், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர வாய்ப்பு தர பட்டது. அந்த வகையில், ஓவியாவையும் அழைத்து பேசிய விஜய் டிவி நிர்வாகம், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர வேண்டும், என்று ஓவியாவை கேட்டுக்கொண்டது. ஆனால், இதற்கு ஓவியா மறுப்பு தெரிவித்ததோடு, இனி பிக் பாஸ் வீட்டுக்குள் வர போவதில்லை என்று அறிவித்தார்.
ஒரு வேளை ஓவியா மீண்டும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றிருந்தால், டைடிலை அவர் தான் வென்று இருப்பார், அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.
அப்படி இருக்கும் போது, அவர் ஏன்? போட்டியில் பங்கேற்கவில்லை, என்று ரசிகர்களுக்கு வியப்பாக இருந்த நிலையில், அந்த ரகசியத்தை தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்த ஓவியா, ”எப்போதும் தன்னை சுதந்திரமாக முடிவு எடுக்க வைத்த தனது தந்தை, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு போக வேண்டாம், என்று என்னிடம் அன்பாக கேட்டுக்கொண்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாத நிலையில், தான் பிக் பாஸ் போட்டியில் நான் மீண்டும் பங்கேற்கவில்லை.” என்றார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...