Latest News :

ஃபர்ஸ்ட் லுக்கில் பயம் காட்டிய ‘டிமான்ட்டி காலனி 2’!
Saturday August-05 2023

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த திகில் படங்களில் ‘டிமான்ட்டி காலனி’ படத்திற்கு முக்கிய இடம் உண்டு. 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வித்தியாசமான திகில் காட்சிகளுடன் ரசிகர்களை மிரள வைத்தது. இன்றும் இப்படத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.

 

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், முதல் பாகத்தின் நாயகன் அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பயத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டலாக உள்ளது.

 

டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முந்தின பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.  

 

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. 

 

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க,  கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், RC ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

முழுப்படமும் முடியும் முன்னதாக படத்தின் முழு உரிமையையும் BTG Universal நிறுவனம் சார்பில் பெற்று, பாபி பாலச்சந்திரன் இப்படத்தின் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும் படத்தின் முழு வெளியீட்டையும் BTG Universal நிறுவனம்  மேற்கொள்ளவுள்ளது. 

 

டாப்-லீக் மென்பொருள் ஜாம்பவான் திரு. பாபி பாலச்சந்திரன்,  எக்ஸ்டெரோவின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். இது சைபர் தடயவியல், சட்ட ஆளுமை ஆபத்து மற்றும் இணக்கம் (GRC) மற்றும் டேட்டா பிரைவசி ஸ்பேஸ் ஆகியவற்றில் முன்னணி பன்னாட்டு SaaS யூனிகார்ன் நிறுவனமாகும். மென்பொருள் துறையில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன் BTG Universal நிறுவனம்  மூலம் திரைத்துறையில் கால் பதிக்கிறார். திரைத்துறையின் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த மனோஜ் டாக்டர்.எம்.மனோஜ் பெனோ இந்நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்றுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக “டிமான்டி காலனி 2“ வெளியாகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும்.

Related News

9160

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery