Latest News :

‘ராணுவன்’ வீடியோ பாடல் மூலம் இயக்குநரான நடிகர் காதல் கண்ணன்!
Saturday August-05 2023

’காதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான காதல் கண்ணன், தொடர்ந்து ‘ஈரம்’, ‘கோ’, ‘கற்றது தமிழ்’, ‘100’, ‘144’, ‘தும்பா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து நல்ல நடிகராக கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தவர், தற்போது ‘ராணுவன்’ என்ற வீடியோ பாடல் மூலம் இயக்குநர் பயணத்தை தொடங்கியுள்ளார்.

 

குடும்பங்களை பிரிந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பலவித இன்னல்களை கடந்து மகிழ்ச்சியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நம் ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘ராணுவன்’ பாடல் குறித்து காதல் கண்ணன் கூறுகையில், “னக்கு எப்போதுமே சமூக ஆர்வலராக பணி செய்ய விருப்பமுண்டு. அந்த அர்ப்பணிப்புடன் சரியான பாதையில் பயணித்து வருகிறேன். இது தொடர்பாக ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் ‘கௌரவ டாக்டர்’ பட்டத்தையும், தொடர்ந்து ‘சிறந்த சமூக ஆர்வலர்’ மற்றும் HRO இன்டர்நேஷனல் வழங்கிய ‘சிறந்த நடிகருக்கான விருது’ போன்ற மதிப்புமிக்க பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். நம் நாட்டைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்திய ராணுவப் படையை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை சரியான முறையில் செலுத்த விரும்பினேன். அப்போது தான் நான் இந்தத் திட்டத்தில் இணைந்தேன். விமல் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிரவீன் வரிகள் எழுதியுள்ளார்.

 

Kadhal Kannan

 

அதை ஒருமுகப்படுத்தி, இயக்கும் மகிழ்ச்சியான பணி எனக்கு வழங்கப்பட்டது.  நான் மகிழ்ச்சியடைய முதல் காரணம் இந்திய இராணுவப் படைக்கு நன்றி செலுத்துவது. மற்றொன்று, இந்தப் பாடலின் மூலம் நான் இயக்குநராகப் பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பாடல் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புக்காக மட்டுமே. இதன் பின்னால் எந்தவொரு வணிக நோக்கமும் இல்லை. இந்த பாடலை ஆகஸ்ட் 15, 2023 அன்று சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறோம். அனைத்து திரையரங்குகளிலும் அந்தந்த காட்சிகள் தொடங்குவதற்கு முன் பாடல் திரையிடப்பட்டால் அது இந்திய இராணுவத்தினருக்கு கொடுக்கும் அற்புதமான மரியாதையாக இருக்கும்” என்றார்.

 

Ranuvan Song Release

 

இந்தப் பாடலில் இயக்குநர்-நடிகர் காதல் கண்ணனுடன் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலுக்கு சபீர் அலிகான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் பாடலின் மொத்த படப்பிடிப்பும் 3 நாட்களில் முடிந்துவிட்டது. இந்த பாடலின் பர்ஸ்ட் லுக்கை திரைக்கதை மன்னன் மற்றும் நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கே.பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ranuvan

Related News

9162

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery